ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது | Yedho kirupaiyil vaazhkka odudhu | Tamil Lyrics

Ravi Bharath

#197
Font

Chorus

 ஏதோ  கிருபையில  வாழ்க்க  ஓடுது
 உங்க  இரக்கத்தையே  உள்ளம்  நாடுது  -2
 எசமான்  உங்களத்தானே  நம்பி  வாழுறேன்
 மாறாத  கிருபையத்தான்  நம்பி  ஓடுறேன்  -2

Verse 1

 சுய  நீதிய  கழட்டி  வெச்சேன்
 உங்க  நீதிய  உடுத்திகிட்டேன்
 நீதிமானா  மாத்துனீங்களே  என்ன
 நீதிமானா  மாத்துனீங்களே
 செஞ்ச  பாவத்த  ஒத்துக்கிட்டேன்
 சாஷ்டாங்கமா  விழுந்துபுட்டேன்
 மன்னிச்சு  அணைக்குறீங்களே
 என்ன  மன்னிச்சு  அணைக்குறீங்களே..

Chorus

 ஏதோ  கிருபையில  வாழ்க்க  ஓடுது
 உங்க  இரக்கத்தையே  உள்ளம்  நாடுது

Verse 2

 பசிக்கும்போது  உணவு  தந்து
 ஜெபிக்கும்போது  இரங்கி  வந்து
 ஆசீர்வதிக்கிறீங்களே    என்ன
 ஆசீர்வதிக்கிறீங்களே
 அதிசயமா  நடத்துறீங்க
 ஆலோசனைய  கொடுக்குறீங்க
 பிள்ளையா  ஏத்துக்கிட்டீங்களே    என்ன
 பிள்ளையா  ஏத்துக்கிட்டீங்களே

Chorus

 ஏதோ  கிருபையில  வாழ்க்க  ஓடுது
 உங்க  இரக்கத்தையே  உள்ளம்  நாடுது

Verse 3

 உள்ளதில்  வசனம்  விதைக்கிறீங்க
 உள்ளங்கையில்  என்ன  வரையுறீங்க
 தகப்பன்  நீங்கதானய்யா  என்
 தகப்பன்  நீங்கதானய்யா
 தவறும்போது  திருத்துறீங்க
 தடுக்கும்போது  புடிக்கிறீங்க
 தாயும்  நீங்கதானய்யா    என்
 தாயும்  நீங்கதானய்யா
 
 ------x------x------x------
 

Chorus

 Yedho  kirupaiyil  vaazhkka  odudhu
 Unga  irakkaththaiye  ullam  naadudhu  -2
 Esamaan  ungala  ththaane  nambi  vaazhuren
 Maaraatha  kirupaiya  ththaan  nambi  oduren  -2

Verse 1

 Suya  needhiya  kazhatti  vechchen
 Unga  needhiya  uduththikitten
 Needhimaana  maathuneengale  enna
 Needhimaana  maathuneengale
 Senja  paavaththa  oththukitten
 Saashtaangama  vizhundhuputten
 Mannichu  anaikkureengale
 Enna  mannichu  anaikkureengale..

Chorus

 Yedho  kirupaiyil  vaazhkka  odudhu
 Unga  irakkaththaiye  ullam  naadudhu

Verse 2

 Pasikkumpodhu  unavu  thanthu
 Jebikkumpodhu  irangi  vandhu
 Aaseervadhikkireengale    enna
 Aaseervadhikkireengale
 Adhisayama  nadathureenga
 Aalosanei  kodukkureenga
 Pillaiya  yeththukitteengale    enna
 Pillaiya  yeththukitteengale

Chorus

 Yedho  kirupaiyil  vaazhkka  odudhu
 Unga  irakkaththaiye  ullam  naadudhu

Verse 3

 Ulladhil  vasanam  vidhaikkureenga
 Ullangkaiyil  enna  varaiyureenga
 Thagappan  neengadhaanaiyyaa  en
 Thagappan  neengadhaanaiyyaa
 Thavarumpodhu  thiruththureenga
 Thadukkumpodhu  pudikkureenga
 Thaayum  neengadhaanaiyyaa    en
 Thaayum  neengadhaanaiyyaa
#Ravi Bharath #Aayathamaa 4 #Tamil #Lyrics

Favorites

0