புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் | Puththiyulla sthree than veettai kattugiraal | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 4
#191
Font
Chorus
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்
புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்
தேவனை முதலில் தேடுகிறாள்
வசனத்தை தினம் நாடுகிறாள்
Verse 1
கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற
இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும் -2
இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதிஆகிறாள் -2
கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்
Verse 2
நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே மகிழ்வு -2
இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள் -2
சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை
உழைத்து மகிழ்கிறாள்
Verse 3
பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில்
வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்லபடிப்பு -2
இவள் நாணத்தினால் தன்னை
அலங்கரித்துகொள்ளுகிறாள் -2
அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்
------x------x------x------
Chorus
Puththiyulla sthree than veettai kattugiraal
Puththiyillaadhavaloadhu adhai iduthu podugiraal
Thevanai mudhalil thedugiraal
Vasanathai thinam naadugiraal
Verse 1
Kanavan thalaiyil kreedom keezhpadigira
Ippadipatta manaivithaan purushanukku venum -2
Ival pillaigalukkko endrum baagyavathi aagiraal -2
Kanavanukku ival endrum gunasaali aagiraal
Verse 2
Nadakkeiyile panivu vaarthaiyile kanivu
Kartharai ival nambuvadhaal vaazhkaiyile magizhvu -2
Ival vaai thiranthaal gnaanam vilanga thirakkiraal -2
Sombalin appathai pusippadhillai
Uzhaiuthu magizhgiraal
Verse 3
Bayabakthiyile valarppu kudumba poruppil
Valarum penpillaigalukku ival vaazhkai nallapadippu -2
Ival naanaththinaal thanne
Alangarithukollugiraal -2
Adakkam anbu amaithiyaale vettri vaazhkai vaazhgiraal