பரனே என் இதயத்தில் வாரும் | Parane en ithayathil vaarum | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 4
#193
Font
Chorus
பரனே என் இதயத்தில் வாரும்
பரநோக்கம் நிறைவேற்ற வாரும் -2
அனுதினம் என்மனம் கழுவிடும்
அழகிய புதுமனம் தந்திடும்
பரிவுடன் பாவியை கண்டிடும் – என்
சுயமதை திருசலவை செய்திடும்
Verse 1
அதட்டிவிடும் நெஞ்சை அகற்றிவிடும் நஞ்சை
புகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தை -2
பரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தை
அழுகிய சிந்தனை மங்கவே
மனதினுள் வசனங்கள் தங்கவே
அகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவே
அடைக்கலம் அருளுமே துங்கவே -பரனே என் இதயத்தில் ….
Verse 2
திருக்குள்ளவன் மிஞ்சும் கிறுக்குள்ளவன் கெஞ்சும்
கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன் -2
கிருபை கிடைக்கத்தானே பதறுகிறேன்
புவியதன் சோதனை குறையவே
பரமனின் போதனை நிறையவே
பகலதன் பிள்ளையாய் வளரவே
உலகினில் தீபமாய் ஒளிரவே -பரனே என் இதயத்தில் ….
Verse 3
மயக்கத்திலே மனம் கிரக்கத்திலே குணம்
உறக்கத்திலிருந்தென்னை எழுப்பிவிடும் –2 கெட்ட
உணர்ச்சிகள் அனைத்தையும் கொளுத்திவிடும்
அகமதின் கபடினை தள்ளவே
ஆவியின் கனிதனை அள்ளவே
அசுரனை அனுதினம் வெல்லவே
அவனியில் கிருபையைச் சொல்லவே -பரனே என் இதயத்தில் ….
------x------x------x------
Chorus
Parane en ithayathil vaarum
Paranokkam niraivetra vaarum -2
Anudinam enmanam kazhuvidum
Azhagiya puthumanam thanthidum
Parivudan paaviyai kandhidum – en
Suyamadhai thirusalavai seithidum
Verse 1
Athattividum nenjai agattrividum nanjai
Puguththividum enakkuL paramasinthai -2
Parisuththam ketkiren um kuzhanthai
Azhugiya sinthanai mangave
Manadhinaul vasanangal thangave
Agamagizhthenadhuullam pongave
Adaikkalam arulumae thungave -Parane en ithayathil ….
Verse 2
Thirukkullavan minjum kirukkullavan genjum
Karathudane ummidam katharugiren -2
Kirupai kidaikkaththane patharugiren
Puviyathan sothanai kuraiyave
Paramanin pothanai niraiyave
Pagaladhan pillaiyaai valarave
Ulaginil theepamaai olirave -Parane en ithayathil ….
Verse 3
Mayakkathile manam kirakkathile gunam
Urakkathilirunthenai ezhuppividum –2 ketta
Unarchigal anaithaiyum koluththividum
Agamathin kapadina thallave
Aaviyin kanithanai allave
Asuranai anudinam vellave
Avaniyil kirupaiyai sollave -Parane en ithayathil ….