உலகை இரட்சிப்பவரே | Ulagai iratchippavare | Tamil Lyrics

Ravi Bharath

#186
Font

Chorus

 உலகை  இரட்சிப்பவரே
 உன்னத  தெய்வம்  நீரே
 உயர்ந்த  அடைக்கலமே  நீர்
 உயிரின்  உறைவிடமே

Verse 1

 காலங்கள்  தொடங்கிடும்  முன்  கர்த்தராய்  இருந்தவரே
 பூமியை  சுழலச்  சொல்லி  கட்டளை  கொடுத்தவரே
 வானத்தை  விரிப்பதும்  இஷ்டம்போல  மடிப்பதும்
 உமக்கு  கடினமில்லை
 மின்னலை  கைகளுக்குள்  மூடி  வைத்து  நடக்கிறீர்
 உமக்கு  நிகருமில்லையே
 உம்மிடம்  அனுமதி  கேட்டே  அணுவும்  அசைகின்றதே
 அண்டசராசரம்  யாவும்  உமக்குள்  அடங்கிடுதே

Verse 2

 எங்களை  கிறிஸ்துவுக்குள்ளே  தெரிந்துகொண்டவரும்  நீர்
 ரட்சிப்பின்  திட்டங்களெல்லாம்  முன்னரே  அறிந்திருந்தீர்
 கிறிஸ்துவை  எங்களுக்காய்  சாபமாக  மாற்றியது
 அன்பினை  அறிவிக்கத்தான்
 அன்றாடம்  வெற்றிபெற  பரிசுத்த  ஆவி  உண்டு
 பேரன்பை  நிரூபிக்கத்தானே
 உமது  மகிமைக்குத்தானே  எங்களை  படைத்துவிட்டீர்
 எங்களை  மகிமையில்  சேர்க்க  அன்புடன்  அழைத்துவிட்டீர்
 ------x------x------x------

Chorus

 Ulagai  iratchippavare
 Unnatha  theivam  neere
 Uyarndha  adaikkalame  neer
 Uyirin  uraividame

Verse 1

 Kaalangal  thodangidum  mun  kartharaai  irundhavare
 Poomiyai  suzhalach  solli  kattalai  koduththavare
 Vaanathai  virippadhum  ishtampola  madippadhum
 Umakku  kadinamillai
 Minnalai  kaigalukkull  moodi  vaithu  nadakkireer
 Umakku  nigarumillaiye
 Ummidam  anumathi  kette  anuvum  asaigindradhe
 Andasaraasaram  yaavum  umakkul  adangidudhe

Verse 2

 Engalai  Kristhuvukkulle  therinthukondavarum  neer
 Ratchippin  thittangalellaam  munnare  arindhirundheer
 Kristhuvai  engalukkaai  saabamaaga  maatriyadhu
 Anpinai  arivikkathaan
 Andraadham  vetripera  parisuththa  aavi  undu
 Peranbai  niroopikkaththane
 Umadhu  magimaikkuththane  engalai  padaithuvitteer
 Engalai  magimaiyil  serkka  anbudan  azhaithuvitteer
#Ravi Bharath #Aayathamaa 3 #Tamil #Lyrics

Favorites

0